இலக்கியத் தென்றல் |
தமிழ் இலக்கிய வரலாற்றின் சில பகுதிகளை விளக்க எழுந்தநூல் இலக்கியத்தென்றல். ஒரு மொழியிலுள்ள நூல்களின் தோற்றத்தையும் தன்மையினையும் இலக்கிய வளர்ச்சியினையும் காலவரையறைப்படுத்தி வகுத்துக்கூறுவன, இலக்கிய வரலாற்று நூல்கள். தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம், சோழர்காலம், விசயநகர நாயக்க மன்னர்காலம், ஐரோப்பியர் காலம், இக்காலமென ஏழு பிரிவுகளாக வகுத்து, ஒவ்வொரு காலப்பகுதியின் அரசியல்நிலை, அக்காலப்பகுதியிலே தோன்றிய நூல்கள், அவற்றின் பண்பு முதலியனவற்றை ஒழுங்குபெற எடுத்துக்கூறுகின்றது. இந்நூலிலுள்ள இலக்கியப் பரப்பு என்னும் முதற்பகுதி. |